முகத்திற்கு அணிய வேண்டிய முகக்கவசத்தை கால் பெருவிரவில் தொங்க விட்டு, கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க அமைச்சரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மூடிய அறைக்குள் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பிற கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். ஆனால், அவர்களில் பிஷான் சிங் சூபல், சுபோத் உன்னியால் உள்ளிட்டோர் முககவசம் அணிந்திருக்க, அமைச்சர் சுவாமி யாதீஷ்வரானந்த், உள்ளிட்ட சில பாஜகவினர் முககவசம் அணியாமல் இருந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பாக யாதீஷ்வரானந்த் முககவசத்தை காலுக்கு அணிவித்திருந்தது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
முககவசத்தை பாதுகாக்க மிகவும் சுத்தமான இடத்தை அமைச்சர் கண்டுபிடித்துள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ள நிலையில், காங்கிரஸும் தனது சார்பில் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.




