நாட்டில் டெல்டா கோவிட் -19 திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அடுத்த இரண்டு வாரங்களில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காணக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜெயசூரிய இது தொடர்பில் தெரிவிக்கையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் மூலம் எதிர்காலத்தில் டெல்டா தொற்றாளர்களை அடையாளம் காண முடியும் என்றார்.
வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், டெல்டா வைரஸ் திரிபு நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவும். தொற்றாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இலங்கையின் இறப்பு விகிதம் தற்போது இந்தியாவில் பதிவாகியுள்ளதைப் போன்றுள்ளதாக என்று அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை பேண வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை சுத்திகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.




