கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர், முள்ளியாவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாார்.
திருகோணமலையை சேர்ந்த 41 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 இல் அவர் கட்டாருக்கு தப்பிச் சென்றிருந்தார். பின்னர் அவரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக நீல அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் கட்டாரினால் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வார்கள், அவர் விசாரணைக்கு தடுத்து வைக்கப்படுவார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.




