திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை நேற்று (12) மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்ரசா நகர் பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளார். கள்ளக்காதலால் இந்த சிசு உருவாகியுள்ளது.
நேற்று முன்தினமிரவு (11) சிசு பிறந்துள்ளதாகவும், பிறந்த சிசுவினை கொலை செய்து பற்றைக்குள் போட்டு எரித்துள்ளார். பாதி எரிந்த சிசுவின் உடலை தெரு நாய்கள் கவ்விச் சென்றுள்ளன.
இதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சிசுவினை பிரசவித்த பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.




