இலங்கை- இந்திய அணிகளிற்கிடையிலான போட்டித் தொடரின் திருத்தப்பட்ட நேர அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகளை கொண்ட ரி20 தொடருக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணை வெளியாகியுள்ளது.
இலங்கை குழாமில் கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து, போட்டிகள் 5 நாட்களிற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதன்படி ஜூலை 18ஆம் திகதி முதல் ஒரு நாள் தொடர் ஆரம்பிக்கிறது.
ஒருநாள் போட்டிகள் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பிக்கும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது மாலை 3 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரி20 போட்டிகள் இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது இரவு 8.00 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.





