குணச்சித்திர நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது பரபரப்பான மனிதராக மாறியுள்ளார். நடிக,நடிகையர்கள் பற்றி அவர் வெளியிடும் அந்தரங்க தகவல்கள் அனைத்தும் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் நடிகை சுஹாசினி தன்னை தாறுமாறாக திட்டியதை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி பிரபல பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்தார்.
தற்போதும் சினிமாவில் நடந்து வரும் கிசுகிசு, வதந்தி போன்ற சீக்ரெட் செய்தி மற்றும் சம்பவங்கள் குறித்து யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
தன்னை முதன் முதலில் திட்டியது நடிகை சுஹாசினி மணிரத்னம் தான் என கூறியுள்ளார். சுஹாசினி அறிமுகமாகிய முதல் படத்தின் போது பயில்வான் இது பொம்பள மூஞ்சியா, ஆம்பள மாதிரி இருக்கு என விமர்சித்து எழுதியுள்ளார்.
பின்னர் பட விழா ஒன்றில் நடிகை சுஹாசினியை பார்த்த பயில்வான், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நல்லா நடிக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார். அதற்கு பதிலளித்த சுஹாசினி, “உண்மையை சொல்லுங்க, நீங்கள் தானே என்னை அப்படி கூறினீர்கள்“ என்று நேராகவே கூறி பயங்கரமாக திட்டியுள்ளார்.
இந்தத் தகவலை தற்போது பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.




