நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

Date:

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தில் வந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர், இலங்கை போக்குவரத்துசபை பேருந்து ஓட்டுநர் ஒருவரை வாளால் வெட்டுவதாக அச்சுறுத்திய சம்பவத்தை, பேருந்தில் பயணித்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவுசெய்ததோடு, அந்தக் காணொளி சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய திவுலபிட்டிய பொலிசார், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்து நேற்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்