படப்பிடிப்பு தளத்தில் சிகரெட் புகைத்த தமிழ் கவர்ச்சி நடிகை: கண்டித்த இயக்குனர்!

Date:

‘பேய காணோம்’ படத்தில் நடித்து வரும் மீரா மிதூன், படப்பிடிப்பு தளத்திலேயே சிகரெட் புகைத்ததால், இயக்குனர் கண்டித்துள்ளார்.

“அம்மாவை காணோம்… அப்பாவை காணோம்… தாத்தாவை காணோம்… பாட்டியை காணோம்… என்று புகார் செய்வதை பார்த்திருப்போம்… பேயை காணோம் என்று முதன் முதலாக ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே ‘பேய காணோம்’ படத்தின் கதை“ என்கிறார், படத்தின் டைரக்டர் அன்பரசன்.

இந்த படத்தில் மீரா மிதூன் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகன் கவுசிக். முக்கிய வேடத்தில் தருண்கோபி நடிக்கிறார். சுருளிவேல் தயாரிக்கிறார். படத்தில் 2 கற்பழிப்பு காட்சிகள் உள்ளன. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது.

அவரிடம், “உங்களுக்கும், மீரா மிதூனுக்கும் படப்பிடிப்பின்போது தகராறு நடந்ததாக சொல்கிறார்களே?“ என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “மீரா மிதூனுக்கு புகை பழக்கம் இருக்கிறது. எனக்கு அதுபற்றி கவலை இல்லை. எந்த பழக்கமாக இருந்தாலும் அதை பொதுவழியில் செய்வது தப்புதானே… அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். ‘‘இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. உள்ளே போய் புகையுங்கள்’’ என்றேன். இதுதான் நடந்தது“ என்று விளக்கம் அளித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்