குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் அதிர்ச்சி வீடியோ: கணவனிற்கு அனுப்ப பதிவு செய்தாராம்: யாழில் இளம் தாய் கைது!

Date:

தனது பச்சிளங்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், மணியந்தோட்ட பகுதியை சேர்ந்த 23 வயதான தாயொருவரே கைது செய்யப்பட்டார்.

நேற்று (1) இரவு தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய இளம் தாயொருவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தடியொன்றினால் 7 மாத குழந்தையை அந்த பெண் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது.

இன்று காலையில் இது தொடர்பில் நடவடிக்கையெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தையை தமது பொறுப்பில் எடுத்தனர். அத்துடன் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும், தற்போது அரியாலையில் வாடகைக்கு குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அத்துடன், குவைத்தில் குழந்தை பிரசவித்து நாடு திரும்பியதாகவும், கணவர் பணம் அனுப்பாததால், அவருக்கு அனுப்ப குழந்தையை அடிக்கும் வீடியோவை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்