பிரேக்-அப் செய்த காதலனை பழி வாங்க காதலி செய்த செயலை கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

Date:

சீனாவில் காதலன் தன்னை விட்டு பிரிந்து செல்வதை தாங்க முடியாத காதலி காதலினின் காரின் சாலை விதிமுறைகள் செய்து பழி வாங்கி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணலாம்

காதலர்கள் பிரியும் போது பிரிந்து செல்பவர் மீது உள்ள கோபத்தில் அவரை மற்றவர் பழி வாங்குவது என்பதை நாம் பல இடங்களில் கேள்விபட்டிருப்போம். சிலர் அடித்துவிடுவார்கள். சிலர் கோபத்தை தங்களையே ஏதாவது செய்துவிடுவார்கள். ஆனால் சீனாவில் சமீபத்தில் தன்னை பிரிந்து சென்ற காதலனை பழி வாங்க காதலி ஒரு நூதன முறையை கையாண்டுள்ளார்.

கிழக்கு சீனாவின் ஸீஜியங் பகுதியைச் சேர்ந்தவர் க்யூயன். இவரும் அதே பகுதியை சேர்ந்த சூ என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் க்யூயன் இந்த உறவிலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்து அதை சூவிடம் சொல்லியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத சூ தன் காதலனை பழி வாங்க எண்ணியுள்ளார். இதை தன் நண்பர் சென்னிடம் சொல்லியுள்ளார். இருவரும் சேர்ந்து பழி வாங்குவதற்காக நூதன திட்டம் ஒன்றை போட்டனர்.

அதன் படி சென், க்யூனிடமிருந்து அவரது காரை வாங்கி அதை சூ விடம் கொடுத்துள்ளார். சூ அந்த காரை சாலையில் ஓட்டி வேண்டுமென்றே சாலை விதிமுறை மீறல்களை செய்துள்ளார். 2 நாட்களில் மொத்தம் 50 சாலை விதிமுறை மீறல்களில் இந்த கார் சிக்கியுள்ளது. அதில் 49 முறை சிக்னல்களில் நிற்காமல் சென்றது, 1 முறை அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கும் அதிக வேகத்தில் சென்றது என மொத்தம் 50 வழக்குகள் அந்த காரின் மீது பதிவானது.

இதையடுத்து அந்த காரை பொலீசார் பிடித்து காரில் இருந்த சூ மற்றும் சென்னை விசாரித்த போது தான் அது சூவின் காதலரின் கார் அவரை பழி வாங்க இருவரும் சேர்ந்து இதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதே போல கடந்த மாதம் பெண் ஒருவர் தன் காதலன் தன்னை ஏமாற்றியதால் அவரது ரூ23 லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்கை தீவைத்து கொளுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு பொதுநூலகம் பொதுமக்கள் பாவனைக்கு கையளிப்பு

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பதிவு!

தற்போது பிரான்ஸில் உள்ள அசாத் மௌலானாவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது புலிகளை மகிமைப்படுத்துவதாக அமையக்கூடாது!

இலங்கையில் போரினால் உயிரிழந்த பொதுமக்களின் நினைவுகூறுதலில் ஒரு சமச்சீரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்