தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஒரு கல்லூரி பெண்ணாக இருந்தபோது பெரிய பெண்ணாக மாற விரும்பினேன். இப்போது பெரிய பெண்ணாக இருக்கிறேன். ஆனால் மீண்டும் கவலையற்ற கல்லூரி பெண்ணாக திரும்பி செல்ல விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.