நடிகை நயன்தாராவின் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவருக்கும், டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நீண்டகாலமாக காதல் இருந்து வருகிறது. நயன்தாராவை திருமணகோலத்தில் பார்க்கவேண்டும் என்று அவருடைய தந்தை குரியன் கொடியத்து ஆசைப்பட்டார்.
இந்த நிலையில், குரியனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கொச்சியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நயன்தாரா அருகில் இருந்து தந்தையை கவனித்து வருகிறார்.
தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்ததும், துபாயில் உள்ள நயன்தாராவின் சகோதரனும் கொச்சி திரும்பினார்.




