சினிமா படமாகும் ஜீவஜோதி வாழ்க்கை!

Date:

ஜீவஜோதியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் சினிமா படமாக தயாராக உள்ளது.

ஜீவஜோதி மீது ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் ஆசைப்பட்டது, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியது உள்ளிட்ட உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் தயாராக உள்ளது.

ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது.

எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்