வீட்டை விட்டு வெளியில் சென்றால் தினமும் 20 இற்கும் குறையாத ஆண்களால் உரசப்பட்டு தொந்தரவுக்கு உள்ளாவதாக மொடல் அழகியொருவர் குறைபட்டுள்ளார்.
ஒஸ்திரியாவின் வியன்னாவைச் சேர்ந்த 29 வயதான பாம்ப்செல் கோனி ஹாக், ஜிம்மிற்கு செல்லவோ, ஷொப்பிங் செய்யவோ அல்லது மருத்துவரிடம் செல்லவோ முடியாது என்று கூறுகிறார்.
அவர் எங்கு சென்றாலும் ஆண்களால் தொந்தரவிற்குள்ளாகுவதாகவும், அழகிய தோற்றம் ஒரு வரமென்ற போதும், இப்படியான நிலைமைகளால் சாபமாக மாறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜொள்ளு வடியும் ஆண்களை கண்டுகொள்ளாமல் போனால் முரட்டு தனமாக நடக்கிறார்கள் என்கிறார்.
எங்கு போனாலும் இதே பிரச்சனைதான். வீதியில் இப்படியான பிரச்சனைகளை சமாளித்து வைத்தியரிடம் சென்றால் அங்கும் அதுதான் நடக்கிறது. வைத்தியர் ஜொள்ளு வடிகிறார் என்கிறார் இந்த அழகி.
நான் எங்காவது யாருக்கேனும் காத்திருந்தால், அவர் வருவதற்குள் 3 பையன்கள் வந்து என்னுடன் உரச முயல்கிறார்கள் என தெரிவித்தார். ஒரு பெண்ணுடன் எப்படி நடப்பதென்பதை பல ஆண்களிற்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“ஒருமுறை வெளியில் சென்ற போது, எனக்கருகில் ஒரு ஜோடி நின்றது. அவர்கள் முத்தமிட ஆரம்பித்தார்கள். நான் எதேச்சையாக திரும்பி பார்த்த போது, தனது காதலிக்கு முத்தமிட்ட ஆண், காதலிக்கு தெரியாமல் என்னைப்பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினார். எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் உறவில் இருக்கும் ஆணுடன் ஒரு போதும் டேட்டிங் செல்ல மாட்டேன்“ என தெரிவித்துள்ளார்.
அழகியின் இந்த கருத்துக்களால் கொதிப்படைந்துள்ள முரட்டு சிங்கிள்கள் அவரது சமூக ஊடகத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.




