பெண்கள் கிரிக்கெட் தரவரிசை- மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடம்பிடித்த மிதாலிராஜ்!

Date:

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக 8-வது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் (72, 59, 75 ரன்) விளாசியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

2005-ம் ஆண்டு முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்த மிதாலிராஜ் கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்சத்தில் இருந்தார். தற்போது 8-வது முறையாக முதலிடத்தை அலங்கரிக்கிறார்.அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்துக்கு (10,337 ரன், 317 ஆட்டம்) முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்