எளிமையின் அடையாளம் விஜய் சேதுபதி… புகழ்ந்த bigboss ஷிவானி!

Date:

நடிகை ஷிவானி விஜய் சேதுபதியைச் சந்தித்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகை சிவானி சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி எளிமையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி மிகவும் எளிமையானவர் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தனது ரசிகர்கள் யாரைச் சந்தித்தாலும் கட்டிப்பிடித்து ஆனந்தத்தில் முத்தம் கொடுத்து விடுவார். அந்தளவிற்கு ரசிக்கத் தெரிந்த ஒரு சிறந்த கலைஞன் என்று விஜய் சேதுபதியைக் கூறலாம்.

Image

விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மிஸ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் ‘விடுதலை’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹீரோவாக பல படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பல படங்களைக் கைவசம் வைத்திருக்கும் முக்கிய நடிகர் விஜய் சேதுபதி!

spot_imgspot_img

More like this
Related

உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்திய பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை

4.90 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத்...

பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

'கனேமுல்ல சஞ்சீவ'வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 'கேஹெல்பத்தர பத்N'...

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்