இலங்கை தமிழ் அரசு கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகினார் கட்சித் தலைவர் மாவையின் மகன்: மேலும் பல இளைஞரணியினர் விலகல்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், சே.கலையமுதன் விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அவர் தவிர, கட்சியின் இளைஞர் அணி முக்கியஸ்தர்கள் சிலரும் கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக அறிய முடிகிறது. கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் த.சுதர்சன் தனது விலகல் கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். அடுத்த சில தினங்களில் இன்னும் சில இளைஞரணி பிரமுகர்கள் தமது விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் மகன் கலையமுதன் கட்சியின் இளைஞரணி இணைப்பாளர், மத்தியகுழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக  கடிதம் மூலம் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் த.சுதர்சனும் தனது விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை குறிவைத்துள்ள சி.சிறிதரன், கலையமுதனின் இருப்பு கட்சிக்குள் தனக்கு நெருக்கடி தரலாமென்பதால், அவர் மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்த பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதால்,  கட்சிக்குள் அசௌகரியத்தை சந்தித்து வந்தார்.

இதுதவிர, கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த இளைஞர்கள் புதிய வழிகளை நோக்கி செல்லும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தமிழ்பக்கம் அறிகிறது. இதற்கான ஒரு முன்னெடுப்பாகவே, இந்த விலகல்கள் நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நீதித்துறை நியமன தாமதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனப் பிரேரணையில் கையெழுத்து

நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட...

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்