சிறுவர் இல்லத்தில் கொரோனா தாண்டவம்!

Date:

நுவரெலியா நகரில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 37 சிறுவர்களுக்கும் மற்றும் குறித்த காப்பகத்தின் ஊழியர்கள் 8 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகள் காப்பகத்தில் ஏற்கனவே 8 சிறுவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், காப்பகத்தில் இருந்த 40 குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிய தொற்று கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஊழியர்களை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பவும், காப்பகத்தை முழுமையாக கிருமி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்