யாழ் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

மேலும் 3 மாவட்டங்களில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (6) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்பாட்டி பிரதேசம்,

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்,

களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்