மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

Date:

கொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார்.

கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா என்ற பெரும் தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். நோய் பரவலை கட்டுப்படுத்துவற்காக அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்க விதிகளை முழுமையாக கடைப்பிடித்த மக்கள் அனைவருக்கும் நன்றி.

நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை எட்டிய தொற்று பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. பொதுமுடக்கம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவை மூலம்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...

வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி...

எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே

எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்