வவுனியாவில் கர்ப்பவதி பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (02) வெளியாகின.
அதில், ஓமந்தை அரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், குருமன்காடு பகுதியில் ஒரு கர்ப்பவதி பெண் உட்பட ஒரே வீட்டில் ஐந்து பேருக்கும், பனிக்கர்மகிழங்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாந்தசோலை பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும், மன்னகுளம் பகுதியில் ஒருவருக்கும், வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மதவாச்சி பகுதியில் ஒருவருக்கும், குட்செட் வீதி பகுதியில் இருவருக்கும், கோதாண்டார்நொச்சிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சமயபுரம் பகுதியில் ஒருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவருக்கும், உளுக்கொட்டேன பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், புகையிரத நிலைய விடுதியில் ஒருவருக்கும் என 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.