வரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் : உலக சுகாதார அமைப்பு!

Date:

ரும் மாதங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வரைஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனாவால் 18.29 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 39.62 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 16.75 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 1.14 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர். தவிர உலகெங்கும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இவை ஆல்பா, பீடா மற்றும் டெல்டா என்னும் பெயர்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய புள்ளி விவரங்களின்படி சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா வகை பாதிப்புகளும் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது தற்போதைய பாதிப்பு கடந்த வாரத்தை விட 11 நாடுகளில் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதாவது ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது கொரோனா வாராந்திர தொற்று நோயியல் அறிக்கையில் 96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்துத் தெரிவித்து உள்ளன. இந்த 96 நாடுகளில் வரும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்