நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் காமெடி திரைப்படம்!

Date:

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘இடியட்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் மிர்ச்சி சிவா தனது ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். மிர்ச்சி சிவாவின் தனக்கே உரிய மேனரிஸத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பவர். எனவே அவரது படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உண்டு. இவர் கடைசியாக சிஎஸ் அமுதன் இயக்கத்தில் ‘தமிழ் படம் 2’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது லொள்ளு சபா புகழ் ராம் பாலாவின் இயக்கத்தில் ‘இடியட்(Idiot)’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். விக்ரம் செல்வா என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளனர். படத்தில் ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, மயிலசாமி, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தியேட்டர்கள் முடங்கியுள்ளதால் பல படங்கள் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ‘இடிய’ட் திரைப்படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிவகார்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்