கிரீஸ் நாட்டில் 2012-ஆம் ஆண்டு திருடப்பட்ட பிக்காசோ, மாண்ட்ரியன் கலைப்படைப்புகள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக கிரேக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள நாட்டின் மிகப்பெரிய தேசிய அருங்கடச்சியாகத்திலிருந்து திருடப்பட்ட பிரபலமான இரண்டு கலைப்படைப்புகள், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளதாக்க திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
அந்த இரண்டு ஓவியங்களும் 20-ஆம் நூற்றாண்டின் ஜாம்பவான்களான Pablo Picasso மற்றும் Piet Mondrian வரைந்த புகழ்பெற்ற கலைப்படைப்புகள் ஆகும். மீட்கப்பட்ட இரண்டு ஓவியங்களின் தற்பதையே நிலை குறித்த தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
மீட்கப்பட்ட பிக்காசோ ஒரு க்யூபிஸ்ட் பெண்ணின் மார்பளவு ஓவியமாகும். இதனை 1949-ஆம் ஆண்டில் ஸ்பெயின் ஓவியர் பாப்லோ பிக்காசோ, இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக “கிரேக்க மக்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக” கிரீஸ் நாட்டிற்கு நன்கொடையாக அளித்தார்.
மற்றோரு ஓவியம், டச்சு ஓவியரான மொண்ட்ரியன் 1905-ஆம் ஆண்டு வரைந்த ஆற்றங்கரை காற்றாலை ஓவியமாகும்.
2012, ஜனவரி 9-ஆம் திகதி நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில், 16 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய ஓவியர் குக்லீல்மோ காகியா வரைந்த ஒரு மதக் காட்சியின் ‘பேனா மற்றும் மை’ வரைபடத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். ஏறக்குறைய ஏழு நிமிடங்களில் இந்த திருட்டு முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.