பலாங்கொடையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலையில் சுமார் 30 ஆண்டுகள் சாரதியாக பணியாற்றிய சமன்ஹெம குமார நேற்று (28) பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அவர் தான் பணிபுரிந்த பேருந்தை விழுந்து வணங்கி, ஓய்வுபெற்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அவர் பணியாற்றிய காலத்தில், அரச சேவைக்கு அப்பாற்பட்ட சேவைக்காகவும், பலாங்கொட-ராசகல வீதி உள்ளிட்ட பேருந்து வசதியற்ற வீதிகளில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் அறியப்பட்ட நபராக விளங்கினார்.
அவரது மூத்த மகனும் பல ஆண்டுகளாக பலாங்கொட சாலையில் சாரதியாக பணிபுரிந்து வருகிறார், தந்தை செலுத்திய பேருந்தை மகனிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுப்பதாக பலாங்கொடை சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
1
+1