24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
உலகம்

சிரியா, ஈராக் எல்லையில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது. பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் 2 இடங்கள் மற்றும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 5 மாதங்களில், ஈரான் பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்கா நடத்தும் 2 ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

east tamil

Leave a Comment