ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் கொழும்பு மாநகரசபை பகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் போன்ற விபரங்கள் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் என்றும், தடுப்பூசியை பெறுபவர்கள் தேவையான ஆவணங்களுடன் வருமாறு கோரப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் மத்திய கொழும்பை உள்ளடக்கிய பகுதிகளை சேர்ந்தவர்களிற்கு சுகததாச வெளிப்புற அரங்கத்திலும், பொரளை, மேற்கு கொழும்பு மற்றும் கிழக்கு கொழும்பை உள்ளடக்கிய கிருலப்பனை பகுதிகளிற்கு முகலன் வீதியில் உள்ள சித்துமின சமூக மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.




