Pagetamil
சினிமா

விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் நடிகர் சிம்பு!

கடந்த பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. சிம்பு ஷுட்டிங்கிற்கு சரியாக வர மாட்டார். இயக்குனர்களுக்கு சரியாக ஒத்துழைக்க மாட்டார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும் விதமாக மிக குறுகிய காலத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. இதனால் பல தயாரிப்பாளர்களின் கவனம் இவர் மீது திரும்பியுள்ளது. இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் சிம்புவை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 200 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் சில நிறுவனங்களில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஒன்று. இவர்கள் கடைசியாக விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்தனர். அட்லி இயக்கத்தில்வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டடித்தது.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிம்புவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சிம்பு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இடையே நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படம் மூலம் கெளதம் வாசுதேவ் உடன் இணையவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர்தான் அவர் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே ஏஜிஎஸ் தயாரிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்ததாக செய்தி வெளியானது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக சமீபத்தில் கேவி ஆனந்த் காலமாகி விட்ட நிலையில், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை வைத்து சிம்பு நடிப்பில் படம் உருவாக்க ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment