ரூ.5 லட்சம் தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் ‘தங்க பாபா’!

Date:

தற்போது முகக்கவசம் முக்கிய தேவையாக மாறிவிட்டது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கும் அறிவுறுத்தி வருகிறது. இதில் முகக்கவசம் முக்கிய தேவையாக மாறிவிட்டது. எனவே பலரும் இதில் புதுமையை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற அந்த பிரமுகர் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க முகக்கவசத்தை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருவது அந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

இவரை உள்ளூர்வாசிகள் ‘தங்க பாபா’ என்றே அழைக்கின்றனர். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்