கிளிநொச்சியில் சடலமாக மிதந்த பெண்: 3 மாதத்தின் பின் 2 பேர் கைது!

Date:

கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் நேற்று (21) கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அம்பாள்குளத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதந்தது. அது தொடர்பான விசாரணையில், 37 வயதான காமராஜ் திலகேஸ்வரி என்றும் அவருக்கு 03 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.

இருந்தபோதிலும் குறித்த பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டார், யாரால் கொலை செய்யப்பட்டார் போன்ற விபரங்கள் தெரியவந்திருக்கவில்லை.

கிளிநொச்சிப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

41, 24 வயதுடையவர்களே கைதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று அவர்கள் இருவரும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்