கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

Date:

நுவரெலியா மாவட்டம் கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட களுதுமெத கிராம சேவகர் பிரிவு, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர் பிரிவு, பெரமான தெற்கு கிராம சேவகர் பிரிவு, டன்சினன் கிராம சேவக பிரிவு மற்றும் கொரகஓயா கீழ்பிரிவு கிராம சேவகர் பிரிவு, ஆகியன இன்று 21.06.2021 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி இந்த கிராம சேவகர் பகுதிகளில் 168 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்