ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் அந்த நாட்டு பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கணக்கிடப்பட்ட வாக்குகளில் 62 சதவீதத்தை அவர் பெற்றதையடுத்து, அவரது போட்டியாளர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.
இதை தொடர்ந்து, ஈரானின் புதிய ஜனாதிபதியாக அந்த நாட்டு பிரதம நீதியரசர் இப்ராஹிம் ரைசி பதவியேற்பது உறுதியாகியுள்ளது. எனினும், முழுமையாக வாக்கெண்ணும் பணி முடிந்த பின்னரே உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகும். .
எண்ணப்பட்ட 28.6 மில்லியன் வாக்குகளில் 17.8 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை ரைசி வென்றார்,
ஈரானிய தேர்தலில் 59 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ரைசிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பதவியை விட்டு செல்லும் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, தனது வாரிசு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கூறினார்.
“மக்கள் தங்கள் விருப்பத்திற்கு நான் வாழ்த்துகிறேன்,” என்று ரூஹானி கூறினார். “எனது உத்தியோகபூர்வ வாழ்த்துக்கள் பின்னர் வரும், ஆனால் இந்தத் தேர்தலில் யாருக்கு போதுமான வாக்குகள் கிடைத்தன, இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்றார்.