ஓடிடி-யில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்

Date:

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் சம்பளம் தவிர்த்து இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.5 கோடியாம். ஆனால் தற்போது இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ரிலீசுக்கு முன்பாகவே ரூ.20 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளனர். நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கபட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்