விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகும் எனிமி படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
துபாய் சென்று படத்தின் பல காட்சிகளை படமாக்கினர். தற்போது எனிமி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
எனிமி படத்தின் ட்ரைலர் ஜூன் 20-ம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.