‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு வீடியோ பாடல் வெளியீடு!

Date:

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ . இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. படத்தின் போஸ்டரில் 100 சதவீதம் நாட்டி, 100 சதவீதம் டேஸ்ட்டி என இடம்பெற்றிருப்பதால் அடல்ட் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இதை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெயலர் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகளை நெருங்கியது.

அதனைத்தொடர்ந்து இப்படத்தின் ஏதோ சொல்ல பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகியது . தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. பிறகு டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகி சிவாங்கி மற்றும் சூப்பர் சிங்கர் சாம் விஷால் இணைந்து பாடிய இந்தப் பாடல் யூட்யூபில் ட்ரண்டானது.

இந்நிலையில் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு என்ற குத்துப் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. முன்னதாக வெளியான இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ சாங் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்