கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து நடேஸ்- பிரியா குடும்பம் விடுதலை!

Date:

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்- பிரியா குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்காலிகமாக பெர்த் பகுதியில் வாழ அனுமதிக்கப்படுவதாக குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke)  அறிவித்துள்ளார்.

குடிவரவு அமைச்சர் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தற்போதைக்கு தடுப்புமுகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அந்தக் குடும்பம் நிரந்தர விசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வழியைத் திறக்கவில்லை என்றும் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக இவர்கள் community detention-இல் வாழ அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர்  கூறினார்.

குருதித்தொற்றுக்காக பெர்த்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் தருணிகாவுடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வாழும் வகையில் பெர்த்தில் இக்குடும்பம் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி community detention placement இன் கீழ் பாடசாலைகள் மற்றும் ஆதரவு சேவைகளை இலகுவில் பெறக்கூடிய இடமொன்றில் இவர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நடேசலிங்கம்- பிரியா குடும்பம் சட்டப்போராட்டத்தை தொடரும் பின்னணியில், தடுப்புக்காவலில் சிறுவர்களை வைத்திருப்பது தொடர்பிலான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு “பொருத்தமான இரக்கத்தை” காண்பிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தந்தையும் சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருந்த நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பெர்த் சென்று தருணிகாவுடன் இணைகின்றனர்.

புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர்.

அவர்களிற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக விசா 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது. அதற்கு எதிராக அவர்கள் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்