அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்ற மீனவர் 40 வருடங்களாக கடலுக்குக்குள் நீந்தி இறால் பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றுள்ளார். அப்போது 36 டன் எடையுள்ள ஒரு திமிங்கலம் அவரை விழுங்கியது. அப்பகுதி great white sharks எனும் சுறா மீன்கள் சுற்றித்திரியும் இடம் என அறிந்த பேக்கர்டு தான் சுறாவால் விழுங்கப்பட்டு விட்டோம் என அறிந்தார்.ஆனால் விழுங்கிய 40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர் பிழைத்தார்.
மேலும் இதுகுறித்து,மைக்கேல் பேக்கர்டு கூறுகையில்,
இப்போது நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என பேக்கர்டு கூறினார்.நான் சுமார் 30 முதல் 40 விநாடிகளில் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்தேன்.அப்போது,நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால்,அதன்பின்னர் திமிங்கலம் என்னை துப்பியது.