வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக இலங்கையை பூர்விகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கப்ரியல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கப்ரியல், அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.




