நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 5342 கொரோனா தொற்றாளர்கள்

Date:

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 5342 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். 78 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 113 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் கொரேனா தொற்று தொடர்பாக 9.6.2021 மாலை வெளியான அறிக்கையின்படி 5342 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 78 பேர் மரணமடைந்துள்ளனர். 3915 குடும்பங்கள் தன்மைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 09.06.2021 வரையான 24 மணித்தியாலயத்தில் 113 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் 48 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அம்பகமுவ பகுதியில் 1073 குடும்பங்களும் கொத்மலை பகுதியில் 897 குடும்பங்களும் ஹங்குரன்கெத்த பகுதியில் 216 குடும்பங்களும் வலப்பனை பகுதியில் 918 குடும்பங்களும் நுவரெலியாவில் 811 குடும்பங்களுமாக மொத்தமாக 3915 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரேனா தொற்று உறுதியானவர்களில் அதிகமானவர்கள் அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் அம்பேகமுவ பகுதியில் 982 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 665 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 383 பேரும் கொட்டகலை பகுதியில் 309 பேரும் கொத்மலையில் 458 பேரும் லிந்துலையில் 337 பேரும் மஸ்கெலியா 255 பேரும் மதுரட்ட பகுதியில் 122 பேரும் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்டவர்களில் 365 பேரும் புதிய திஸ்பனை பகுதியில் 388 பேரும் நுவரெலியாவில் 452 பேரும் இராகலையில் 327 பேரும் வலப்பனை பகுதியில் 299 பேருமாக மொத்தமாக 5342 பேர் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமாக தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்கள் அதிகம் இனம் காணப்பட்ட பிரதேசமாக அம்பகமுவ பிரதேசம் காணப்படுகின்றது. இங்கு 982 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன். இதுவரையில் நுவரெலியா மாவட்டத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன். அதில் அதிகமானவர்கள் நுவரெலியா பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர அம்பகமுவ பகுதியில் 27 பேரும் வலப்பனை பகுதியில் 11 பேரும் கொத்மலையில் 6 பேரும் ஹங்குரன்கெத்த பகுதியில் 2 பேருமாக 78 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் அதாவது இந்த அறிக்கை வெளியான (09.06.2021) அன்று மாலை 4 மணி வரை நுவரெலியா பகுதியிலேயே அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 46 பேர் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்