காதலரால் நடுத்தெருவிற்கு வருவேனென அஞ்சும் நயன்தாரா!

Date:

விக்னேஷ் சிவனின் பிஸ்னஸ் முயற்சிகளால் தான் நடுத்தெருவுக்கு வர வேண்டி வந்து விடலாமென நயன்தாரா அஞ்சுகிறாராம்.

முன்னணி நடிகையான நயன்தாரா ஒரு பக்கம் சம்பாதிக்கும் பணத்தை விக்னேஷ் சிவன் இன்னொரு பக்கம் பிசினஸ் செய்து வருகிறார். நல்ல விதமாக போய்க் கொண்டிருந்த பிஸ்னஸ், இந்த ஊரடங்கு சமயத்தில் ஏடாகூடமாக மாட்டிக் கொண்டு விட்டதாம்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகிய மூவரையும் வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு மீதம் உள்ளது.

விக்னேஷ் சிவன் படம் இயக்குவதையும் தாண்டி நல்ல படங்களை தயாரிக்கவும் நல்ல படங்களை வாங்கி வெளியிடவும் முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் நெற்றிக்கண், ராக்கி, கூலாங்கல் போன்ற படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன.

ஆனால் தற்போது திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாததால் அந்த மூன்று படமும் பெரிய நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறதாம். இதனால் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யலாமா எனவும் பேசி வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் இந்த தயாரிப்பு விஷயம் நயன்தாராவுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்து வரும் பணத்தை ஒரே நேரத்தில் இப்படி பல இடங்களில் சிக்க வைத்தால் வருங்காலத்தில் நடுரோட்டுக்கு வர வேண்டியதுதான் என எச்சரித்துள்ளாராம்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்