கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் நாடு தழுவிய முழு ஊரடங்கு – மலேசிய அரசு!

Date:

உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடி தணிந்தபாடில்லை. மலேசியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், நாடு தழுவிய
முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மலேசியா மட்டுமல்லாமல் தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கொரோனா பரவல் அதிகரிப்பால் திணறி வருகின்றன. அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மலேசியாதான்.

மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,800. இதில் 40 விழுக்காட்டினர் கடந்த மே மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

மலேசியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. அண்மையில் வந்த ரமலான் பண்டிகையின்போது கட்டுப்பாடுகள் சற்று சறுக்கியதாலும், உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியதாலும் கொரோனா பாதிப்பு எகிறியது.

இந்நிலையில், மலேசியாவில்  நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில் மருந்துக் கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள் ஆகிய அத்தியாவசிய தொழில்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...

‘தேனிசை தென்றல்’ தேவா உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது...

அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர், தொழில​திபர் காவ்யா கலாநிதி மாறனின் திருமண வரவேற்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்