யாழில் மூதாட்டியை கொன்று நகை திருடியவர் கைது; பொலிசார் மறந்திருப்பார்கள் என 2 வருடத்தின் பின் ஊருக்கு வந்து சிக்கினார்!

Date:

தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார், 25 வயதுடைய அவர் இரண்டு ஆண்டுகளாக புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய்க்கு வந்திருந்த நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான அணியினர் கைது செய்தனர்.

தெல்லிப்பழை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (70) என்ற மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு மே 6ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர். சம்பவத்தையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

6வது சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் 6ஆவது சந்தேக நபர் 2 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதாட்டி கொலை செய்யப்பட்ட போது நான் அவரது காலை பிடித்து வைத்திருந்தேன். என்னை இரண்டு ஆண்டுகள் தலைமறைவாகியிருக்குமாறு மற்றவர்கள் கூறினார். பொலிஸார் மறந்த பின்னர் வீட்டுக்கு வருமாறும் தெரிவித்திருந்தனர் என்று சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்