யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

Date:

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது.

இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது, கட்டட நிர்மாணப் பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, குறித்த கட்டடத்திற்கான திட்ட முன்மொழிவைப் பிரதிபலிக்கும் பெயர்ப்பலகையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், பிரதியமைச்சர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், இலங்கை நீர்வளச் சபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் 190 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பிரிவு நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்