கிளிநொச்சியில் பெரும் அக்கப்போர்: மாட்டுடன் முட்டியது வாள்வெட்டில் முடிந்தது!

Date:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் கூழாவடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்ற ரக்ரர் மாட்டுடன் மோதியதில் ஏற்பட்ட முரண்பாடு இவ்வாறு மோசமான நிலையை உருவாக்கியுள்ளது

இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் ஏனையோரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை காயம் அடைந்தோரில் வயது முதிர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்பி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...

மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன்

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்