கைத்தொலைபேசி ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

Date:

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்  சாய்ந்தமருது பொலிஸாரால் சனிக்கிழமை (17) மாலை   கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி வன் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்ட போது குறித்த 35 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால்   கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசி ஊடாக மின்னல் வேகத்தில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இச்சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்  மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று(18)  சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இச்சுற்றிவளைப்பு  அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேடமுல்லவின்  மேற்பார்வையிலும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின்  ஆலோசனையிலும்  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  நெறிப்படுத்தலிலும்  சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட்களான பாறுக் (43890), கியாஸ் (76369), மோகன்ராஜ் (83645) மற்றும் பொலிஸ் சாரதி சஞ்சீவ அடங்கிய குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை  முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்