ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பாக தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் தனுஷ் அந்த படத்தை கை கழுவி பல நாட்களாகிவிட்டது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 1ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் தான் ட்வீட் செய்தார். அது குறித்து தனுஷ் கண்டுகொள்ளவே இல்லை.
ஜகமே தந்திரம் ரிலீஸ் தொடர்பான கோபத்தில் இருக்கிறார் தனுஷ். ஜகமே தந்திரம் படம் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. தன் படம் தியேட்டரில் அல்லாமல் ஓடிடியில் வெளியாவது தனுஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என்று தனுஷ் ரசிகர்கள் தயாரிப்பாளர் சசிகாந்திடம் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அதனால் ஒரு பலனும் இல்லை. ஓடிடி ரிலீஸுக்கு தனுஷும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து தான் ஜகமே தந்திரம் படத்தை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டார் தனுஷ். அண்மையில் கூட ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் எழுதிப் பாடிய நேத்து பாடல் வீடியோ வெளியானது. அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்தும் தனுஷ் விளம்பரம் செய்யவில்லை. படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். ஜூன் 1ம் தேதி ட்ரெய்லரை பார்த்து ரசிக்க தனுஷ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ட்ரெய்லர் கண்டிப்பாக மாஸாகத் தான் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். அவர்கள் சந்தோஷத்தில் இருக்க, தன் படம் ஓடிடியில் வெளியாகப் போகும் கோபத்தில் இருக்கிறார் தனுஷ்.
இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இதை அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
தனுஷ், மாரி செல்வராஜ் மீண்டும் கூட்டணி சேரும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும்.