பாதிக்கப்பட்ட மீனவர்களிற்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க சர்வதேச நிறுவனங்களுடன் பணியாற்ற தயார்!

Date:

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசாங்கம் தவறினால்,  அதை பெற்றுக் கொடுக்க சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று சிலாபத்தில் ஊடகங்களுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,

இந்த சம்பவத்தால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் கப்பலில் இருந்து இரசாயனங்கள் மற்றும் பிற குப்பைகள் கடலில் விழுந்ததன் காரணமாக,
கடல் சூழல், கடற்கரைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவை சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் கடல் தளம், பவளப்பாறைகள், மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இந்த அமைப்பை மீட்டெடுப்பதற்கும், அதே பகுதியில் மீன்பிடி மீண்டும் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் எவ்வளவு காலம் ஆகும் என்பதை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோருவதற்கு முன்பு அனைத்து கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மீனவர்கள் மீன்பிடிக்கத் தடுக்கப்படுவதாகவும், மீன் உட்கொள்ள விரும்புவோரும் அதை செய்ய முடியாமலுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே அரசாங்கம் இழப்பீடு கோருவது மட்டுமல்லாமல் சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அடுத்த சில நாட்களிற்கு கவனிப்பார்கள் என்றும் திருப்திகரமான பதில்கள் வழங்கப்படாவிட்டால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற சர்வதேச முகவர் மற்றும் நாடுகளுடன் ஆலோசிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்