Pagetamil
சினிமா

குணச்சித்திர நடிகர் சுபா வெங்கட்,கொரோனா சிகிச்சை பலனின்றி காலமானார்!

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் சுபா வெங்கட், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் அதிகமான உயரிழப்புகள் ஏற்படுகின்றன. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது தமிழக அரசு.

கொரோனா இரண்டாம் அலையால் திரைத்துறையினர் பலர் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழப்பது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நகைச்சுவை நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி, நிதிஷ் ராணா, இயக்குனர் அருண் காமராஜாவின் மனைவி, பாடகர் கோமகன், கில்லி பட புகழ் நடிகர் மாறன் உள்ளிட்டோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது குணச்சித்திர நடிகரான சுபா வெங்கட் கொரோனாவால் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்

வெங்கட் சுபா எனப்படும் வெங்கட கிருஷ்ணன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா துறையில் பணியாற்றி வரும் இவர், யுடியூபில் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களையும் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நடிகர் சுபா வெங்கட், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.48 மணியளவில் உயிழந்துள்ளார். இந்த தகவலை அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகர் வெங்கட் சற்றுமுன் 12.48க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் வெங்கட் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

Leave a Comment