குசல் பெரேரா, துஷ்மந்த சமீர அபாரம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி; சூப்பர் லீக்கின் முதல் புள்ளி பெற்றது!

Date:

பங்களாதேஷிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது. இதன்மூலம், வெள்ளையடிப்பிலிருந்து இலங்கை தப்பித்தது.

கப்டன் குசல் ஜனித் பெரேர அடித்த அட்டகாசமான சதம் மூலம் 286 என்ற பாதுகாப்பான இலங்கை எட்டிய இலங்கை, துஷ்மந்த சமீரவின் ஆக்ரோச பந்துவீச்சு மூலம் பங்காளாதேஷை  189 ஓட்டங்களிற்குள் சுருட்டி, ஆறுதல் வெற்றியை பெற்றது.

2-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் தொடரை வென்றது.

இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை குவித்தது.

தொடக்க வீரர் தனுஷ்க குணதில 39 (33 பந்துகள், 5 பௌண்டரி, 1 சிக்சர்), கப்டன் குசல் ஜனித் பெரேரா 120 (122 பந்துகள், 11 பௌண்டரி, 1 சிக்சர்), தனஞ்சய டி சில்வா 55 (70 பந்துகள், 4 பௌண்டரி) ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் தஷ்கின் அஹமட் 46 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய பங்களாதேஷ், 2 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தது.  தொடர்ந்து சீராக விக்கெட்டை இழந்த அந்த அணி, 189 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. மஹ்மதுல்லா 53, ஹொசைன் 51 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 16 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டை வீழ்த்தினார்.  ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறந்த பந்துவீச்சு இது. ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டை முதன்முறையாக கைப்பற்றியுள்ளார். பங்களாதேஷின் ஆரம்ப விக்கெட்டுக்களை வீழ்த்தி அந்த அணியை நிலைகுலைய வைத்தார். ஆட்டநாயகன் அவரே. தொடரின் நாயகன் பங்களாதேஷ் அணியின் முஷ்பிகூர் ரஹீம்.

இன்றைய போட்டியில் முதல் பந்திலேயே முகமது நைமை வீழ்த்தினார். இந்த தொடரின் 3 போட்டிகளிலும், முதல் ஓவர்களிலேயே துஷ்மந்த சமீர விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.ரா

இன்றைய வெற்றியின் மூலம் இலங்கை ஐ.சி.சி ஒருநாள் சூப்பர் லீக்கில் முதல் புள்ளிகளைப் பெற்றது. இலங்கை இப்போது ஐசிசி சூப்பர் லீக்கில் 6 ஆட்டங்களில் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி நாளை இலங்கை திரும்புகிறது. பின்னர்,  ஜூன் 8ஆம் திகதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கு இங்கிலாந்துக்கு புறப்படும்.

இங்கிலாந்து தொடருக்கான அணியை இலங்கை இதுவரை அறிவிக்கவில்லை.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்