நாட்டில் இன்று (28) இதுவரையான காலப்பகுதியில் 2,845 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 177,706 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 30,019 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 2,573 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 146,362 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 1,452 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.




